Thursday, March 10, 2022

ரோஷான் ஏ.ஜிப்ரி

 

ரோஷான் ஏ.ஜிப்ரி


ஆர்.எம்.நௌஸ௱த்( தீரன் சேர்)
அவர்களின் நூல்கள் பற்றி பேசுகிறவர்கள் அவர் எழுதி முஸ்லிம் நாடகங்கள் பற்றி பேசியது குறைவு.
நமது மண்ணுக்கு உரித்தான பேச்சு வழக்கில் நிறைய நாடகங்கள் எழுதி இருக்கிறார்.


Ashra Siraj
மறக்கமுடியாதவை அவை ! இன்னும்நினைவில் தங்கியிருக்கும் நாடகங்கள் எத்தனை எத்தனை

Sunday, May 22, 2016

சமர்ப்பணம்---எம். அஷ்ரப்கான் அவர்கட்கு

சமர்ப்பணம் 



-எம். அஷ்ரப்கான் -
இலங்கை வானொலி  முஸ்லிம் சேவை நாடகத் தயாரிப்பாளர் 

Monday, July 27, 2015

மரித்த பின் உயிர்த் தெழும்


நன்றி lankamuslims.com
மரித்த பின் உயிர்த் தெழும் வானொலி முஸ்லிம் நாடகங்கள்

பஷீர் அலி


முற்றத்தில் நிற்கும் நாவல் மர இலைகளை ஊடறுத்து நிலவொளி பளிச்சிடும். வாசலில் பரத்தியிருக்கும் குருத்து மணல் ஷபளார்| என்றிருக்கும். பக்கத்து வீட்டு ஆண்கள் பெண்கள் என முக்காடிட்டுக் குந்தியிருக்கும் இளமைக் காலத்து காட்சி கண்ணுக்குள் இருக்கிறது.வேறnhன்றுமில்லைஇ செவ்வாய்க்கிழமை இரவு முஸ்லிம் நாடகம் கேட்பதற்கான மகாநாடுதான் இது!எங்கள் வாசலில் மட்டும் கூடும் மகாநாடல்ல அது அன்றைய யுத்த சூழலிலும் கிழக்கு மாகாணத்தில் பரவலாகக் காணும் காட்சி. தவிரஇ நாடுபூராகவும் உள்ள நேயர்களைக் கட்டிப் போட்டிருந்த பெருமை முஸ்லிம் சேவையின் நாடகத்துக்கு இருந்தது புதன் கிழமை காலை தொட்டு இரண்டுஇ மூன்று நாட்களுக்கு அது எதிரொலிக்கும். பெரும்பாலும் பெண்களின் ஷபலாய்| அந்த நாடகத்தில் வந்த பாத்திரங்களாகத்தான் இருக்கும். சமூகத்தில் நடக்கின்ற நல்லது கெட்டதுகளுக்கு உதாரணங்களாக அந்த நாடகங்களே பேசப்படும்.

இப்படிஇ முஸ்லிம் சமூகத்தின் அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை ஆகர்ஷித்திருந்த முஸ்லிம் வானொலி நாடகத்துக்குஇ என்ன கண்ணூறு பட்டதோ சில காலமாய் அது ஒலிபரப்பப்படுவதில்லை. ஆனாலும் முஸ்லிம் நாடகத்தின் திடீர் மறைவு நேயர்கள் மத்தியில் பாரிய இடைவெளியைத் தோற்றுவித்திருந்தது. பின்னர் சின்னத்திரைகள் அடுப்படிகள் வரை புகுந்து விட்டதால் பெரும்பாலான பெண்களின் பொழுதுபோக்கு சின்னத்திரைகளுக்கே வாழ்க்கைப்பட்டுப் போனது. வில்லிகளாக வந்து கணவன்மாரை அதட்டிஇ ஊரையே தன் சுண்டு விரலுக்குள் கட்டிவைக்கும் கதாபாத்திரங்களே நேயர்களின் ஷரோல் மொடலா| கினர்.

500 அங்கங்களைக் கடந்து செல்லும் உப்புச் சப்பில்லா இந்த சின்னத்திரைகள் முஸ்லிம் பெண்களையும் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டன. இருந்தாலும் அன்று ஒலிபரப்பாகும் முஸ்லிம் நாடகங்கள் பற்றிய கதையை எடுத்துவிட்டாலே போதும் அது பற்றி ஆர்வத்துடன் பேசும் பலரைக் காணலாம். எனவேஇ வானொலி முஸ்லிம் நாடகத்தின் தேவை இன்னும் வெற்றிடமாகவே இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வண்ணம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் மீண்டும் புதிய நாடகங்கள் ஒலிபரப்பப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியோடுஇ முஸ்லிம் நாடகத்தின் இன்றைய நிலையும் இடைவெளியின் தாக்கமும் புதிய தலைமுறையினருக்கு அதிலுள்ள பங்களிப்பும் குறித்து சற்று ஆராயலாம். 

உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் குறிப்பாகஇ தமிழ் நாட்டிலுள்ளோர் கூட கேட்கும் ஒரு நிகழ்ச்சிதான் முஸ்லிம் நாடகங்கள். வியப்பான விடயம் என்னவென்றால்இ முஸ்லிம் அல்லாதோரும் இதில் லயித்துப் போவதுதான். சினிமா ஆட்சி செய்யும் தமிழ் நாட்டிலேயே முஸ்லிம் சேவை நாடகங்களுக்கு மௌசு இருந்ததென்றால் அதன் தாக்கம் குறித்து சிந்திக்க வேண்டும்.

ஆயிரம் பேரைக் கூட்டிவைத்து நாள் முழுக்க பயான் செய்வதால் ஏற்படுத்த முடியுமான மாற்றத்தைஇ கலைத்துவத்துடன் அரை மணிநேர வானொலி நாடகத்தால் செய்ய முடியும். இதுவே நாடகம் எனும் ஊடகத்தின் தனித் தன்மைக்குப் போதுமான ஓர் எடுத்துக்காட்டாகும்.
வானொலி நாடகம் சமூகத்தில் சிறந்த கருத்து மாற்றத்தை செய்யும் என்பதை முஸ்லிம் சமூகம் காலம் தாழ்த்தியே கண்டு கொண்டது. ஆனால்இ இலங்கை தமிழ் சமூகம் இதனை 1925ஆம் ஆண்டளவிலேயே கண்டு கொண்டது. இருந்தாலும் 1940 களிலேயே தமிழ் நாடகத்தின் ஊடகப் பெறுமதி வலுப்பெற்றது எனலாம்.

1940 களிலேயே முஸ்லிம் சேவையில் முஸ்லிம் நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டன. ஆனாலும் காலம் தாழ்த்தி ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் நாடகங்கள் தமிழ் நாடகங்களை விஞ்சிக் கொண்டு மேலெழுந்தன.

முஸ்லிம் சேவையின் முதலாவது நாடகத் தயாரிப்பாளரான மர்’_ம் எம்.எச். குத்தூஸ் மிகத் திறமையாகத் தனது பங்களிப்பை செய்தார். அவரின் நாடகத் தயாரிப்புத் திறமை சொற்ப காலத்திலேயே நேயர்களைக் கவர்ந்திருந்தது.

இவர் தயாரித்த நாடகங்களில் பீ.எச். அப்துல் ‘மீட்இ ஏ. ஜவா’ர்இ ஏ.எஸ்.எம்.ஏ. ஜப்பார்இ கலைச் செல்வன்இ அமீனா பேகம்இ ஞெய் ற’Pம் ஷ’Pட்இஷபுர்கான் பீ போன்றNhர் பாத்திரமேற்றுத் நடித்தனர். இவர்களின் குரல் வளமும் பாத்திரங்களை நகர்த்திச் செல்லும் பாங்கும் நேயர்கள் உள்ளங்களில் இவர்களைப் பதியச் செய்தது.

பின்னர் தொண்ணூறுகளில் நாடகத் தயாரிப்பாளராகக் கடமையாற்றிய எம். அஷ்ரஃப்கான் அவர்களின் திறமையான நிருவாகத்தின் கீழ் காத்திரமான பல நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டன.
நாட்டை யுத்த மேகம் விழுங்கியிருந்த தொண்ணூறுகளில் ம';ரிபுடன் கதவுகளை இழுத்து மூடிவிட்டு வீட்டுக்குள் முடங்கிக் கொள்ளும் பயங்கர நிலை வடக்குஇ கிழக்கில் இருந்தது. ஆனாலும் செவ்வாய்க் கிழமை இரவுகளில் முஸ்லிம் நாடகம் கேட்பதற்காய் பக்கத்து வீடுகளில் உள்ளோர் எல்லாம் ஒன்றாகக் கூடி காத்திருக்கும் காட்சியை அங்குள்ள கிராமங்களில் காணலாம்.

இவ்வாறு தாக்கமிக்க ஊடகமான இந்த நாடகங்கள் மூடுவிழாக் கண்டன. ஏற்கனவே உள்ள தயாரிப்பாளர்களும் எழுத்தாளர்களும் நாடகக் கலைஞர்களும் இளம் படைப்பாளிகளை அடையாளம் காணத் தவறியதன் விளைவே இதற்கு முதற் காரணம் என்று கூறலாம்.
தங்கள் ஆளுமைகளை வளர்த்துக் கொள்வதிலும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதிலும் அவர்கள் காட்டிய கரிசனையை இன்னொரு தலைமுறைக்கு வழங்கத் தவறிவிட்டனர். கசப்பாக இருந்தாலும் இதுவே யதார்த்தமாகும்.

பின்னர்இ ஏற்கனவே ஒலிபரப்பாகி சேமித்து வைத்திருக்கின்ற பல நாடகங்கள் மீள் ஒலிபரப்பு செய்யப்பட்டன. அந்த ஒவ்வொரு நாடகமும் கலைத்துவத்துடனும் ஆகர்ஷத்தன்மையுடனும் அவை காணப்பட்டதால் அதனை மீண்டும் புதிதாகக் கேட்கின்ற உணர்வை கொடுத்தன.
இருந்தபோதும் பதிவு செய்யப்பட்டு பொக்கிஷங்களாக வைக்கப்பட்டிருந்த பல நாடகங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து மாயமாகி இருக்கிறதாம். திட்டமிட்டோ கவனயீனமாகவோ பல நாடகங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மூத்த கலைஞர்கள் சிலர் முணுமுணுத்துக் கொள்கின்றனர்.

நாடகம் ஏற்படுத்துகின்ற சமூகத் தாக்கத்தின் விளைவை அடையாளம் கண்டு கொண்ட முஸ்லிம் சேவை முஸ்லிம் நாடகத்தை மீண்டும் ஆரம்பிக்க உள்ள செய்தி மிகவும் வரவேற்கத்தக்கது.

வானொலி நாடகத்தின் தேவை வலுவாக பேசப்படும் இத்தருணத்தில் இளைய தலைமுறை ஒன்றை இதற்குத் தயார்படுத்தும் தேவை உணரப்பட்டிருக்கிறது.
இதனை உணர்ந்த இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மன்றம் முஸ்லிம் சமாதான செயலகத்தின் அனுசரணையில் வானொலி நாடகப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்துகிறது.
நாடுபூராகவுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 26 பேருக்கு நடத்தப்படும் இப்பயிற்சிப் பட்டறையில் சிறந்த நாடகங்களை எழுதுவதற்கான பூரண பயிற்சி வழங்கப்படுகிறது.

சமூகத்தின் ஆற்றல்களை சுமந்து வருகின்ற இந்த 26 இளம் கலைஞர்களையும் சமூகத்தின் குரலாக ஒலிக்கச் செய்ய அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் பொறுப்பு நம்மீது உள்ளது.
பயிற்றப்பட்ட அந்த இளம் தலைமுறையினரிடமிருந்து காத்திரமான வெளியீடுகளைப் பெற்று சமூகத்துக்கு வழங்க அவர்களுக்குத் தொடர் ஊக்குவிப்புகளும் பயிற்சிகளும் தேவைப்படுகின்றன.

சமூக சிந்தனையோடு செயற்படும் தலைவர்கள் தமது புதிய சிந்தனையாக இதனை உள்வாங்க வேண்டும். அவர்களுக்கான தொடர் பயிற்சிகளுக்கும் ஆளுமை விருத்திக்கும் பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும். இது முஸ்லிம் சமூகத்தின் கலைசார் இருப்பு சார்ந்து சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.

சமூக ஆர்வலர்களே! வானலைகளில் தவழ்ந்துவரும் இவர்களின் சமூகப் பணி உங்கள் வியர்வைத்துளிகளாகவும் இருக்கட்டுமே!


Saturday, July 25, 2015

ஆர்.எம். நௌஸாத்தின் வானொலி நாடகங்கள்- ஆய்வுக் கட்டுரை.. -முகமட் அஸ்மத்.

ஆர்.எம். நௌஸாத்தின் வானொலி நாடகங்கள்-
ஆய்வுக் கட்டுரை..

-முகமட் அஸ்மத்.
(தமிழ் சிறப்பு- தெ .கி.ப.க.)



      நாம் இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போன்றே அன்று வானொலி நாடகங்களும் காணப்பட்டன. இதனைப் பற்றி நௌஸாத்-- “ஆ… அது ஒரு  பொற்காலம்! இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு நேயர்களிடம் இருக்கும் வரவேற்பு அப்போது வானொலி நாடகங்களுக்கு இருந்தன. வானொலி நாடகங்களுக்காக நேயர்கள் காத்துக் கிடந்தனர். வானொலி நாடகங்களின்; குறியீட்டொலி கேட்டே தம் கடிகாரங்களை திருப்பி வைக்கின்ற காலம் அது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நௌஸாத்தின் முதல் வானொலி நாடகம் ‘வாக்கு’ முஸ்லிம் சேவையில் 1985 இல் ஒலிபரப்பானது. தொடர்ந்தும் அவர் 1990 வரை சுமார் 12 வானொலி நாடகங்களை எம்.அஸ்ரப்கான் அவர்களின் நெறியாள்கையில் எழுதியுள்ளார். “இந்நாடகங்களில் ‘ஒரு கிராமத்தின் கவிதை’ எனும் வானொலி நாடகம் சுமார் 25 தடவைகள் ஒலிபரப்பானது.”2என்று நௌஸாத் குறிப்பிட்டுள்ளார்.

               இவர் ஆராத்திக் கல்யாணம்ää காகித உறவுகள்ää களவட்டிää ஒரு கிராமத்தின் கவிதைää நினைப்பது ஒன்றுää ஏற்றம்ää நம்பிக்கை முதலான பெயர்களில் வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். இவருடைய சில வானொலி நாடகங்களைப் பற்றி விரிவாக நோக்குவோம்.

             முதலில் இவருடைய ‘ஆராத்திக் கல்யாணம்’ என்னும்; நாடகத்தினைப் பற்றி நோக்குவோம். இந்நாடகமானது சீதனத்தைப்பற்றியும் அதிகமாக சீதனத்தை கேட்கும் மாப்பிள்ளை வீட்டாரைப்பற்றியும்ää அதனை கொடுக்காமல் திண்டாடும் பெண் வீட்டாரின் நிலைமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

     இவ் வானொலி நாடகத்தில் உதுமான் (பெண்ணின் தந்தை)ää சலுகா (மாப்பிள்ளையின் தாய்)ää பைசானா (மாப்பிள்ளையின் தங்கை)ää முஸ்வா முதலாளி (சலுகாவின் கணவனின் நண்பன்) ஆகிய பாத்திரங்களினூடாக கதை நகர்த்தப்பட்டுள்ளது.

     சுப்பர் புரோக்கர் எதையும் சுப்பர் என்று கூறுவதனாலேயேää அவனை எல்லோரும் இப் பெயர் கொண்டழைத்தனர். இவன் உதுமானின் மகளை சலுகாவின் மகனுக்கு பெண்ணாக கொண்டு வருகிறான். மாப்பிள்ளை வீட்டார் சீதனமாக வீடுää வளவுää நகைää பணம் ஐம்பதாயிரம் என்று கேட்கää தனது வருமானத்தினால் அத் தொகையை கொடுக்க முடியாது என்று பெண்ணின் தந்தை கூற அப்போது முஸ்வா முதலாளி வந்து நாற்பதாயிரமாக்கி நடுநிலையில் நின்று முடிவினை  கூறுகின்றார். மாப்பிள்ளை மோட்டார் வண்டியும வாங்கிக் கேட்க அதனையும் கொடுக்கின்றார்.

                உதுமான் பெண் பார்க்க வந்தவர்களை பலகாரம்ääபழம்ää பிஸ்கட்ää கற்கண்டுää குளிர்பானம்ää இனிப்புää வெற்றிலைää பாக்குää பாய்ää படிக்கம்ää சக்கரைää வெடிக்கட்டு முதலானவற்றைக் கொண்டு சிறப்பாக உபசரிக்கின்றார். மாப்பிள்ளையின் தங்கை பைசானா மருதாணியை பெண்ணுக்கு போட்டு விட்டு ஆராத்தியையும் எடுக்கின்றாள். பின்னர் பகல்வர்த்தி கொழுத்துகின்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

             மாப்பிள்ளை வீட்டார்ää வாங்கிக் கொடுத்த மோட்டார் வண்டி பழையதொன்றும்ää உதுமானின் வீட்டுக்கு பூசப்பட்டுள்ள வர்ணப் பூச்சு பட்டிக் காட்டு நிறம் என்றும்ää குறை கூறியதுமில்லாமல் புதிய மோட்டார் வண்டி வாங்கித்தர வேண்டும்ää இளம் நிறத்தில் வீட்டுக்கு வர்ணம் பூச வேண்டும்ää மாப்பிள்ளையின் தங்கைக்கு தங்க நகைகள் போடவேண்டுமென்று நிபந்தனைகளை விதிக்கää அதனை நிறைவேற்ற முடியாமல் வாக்கு வாதங்களில் திருமணம் தடைப்படுகின்றது.

                      உதுமான் சுப்பர் புரோக்கரைப் பார்த்து “கலியானம் முடியக்கொள என்ட சிறு வால் மட்டும் தான் மிஞ்சும்ää மாப்பிள்ளை என்ன இன்ஜினியரா? ஜிலாக்குத்தரா? கரிக்கட்டி சொத்தைக்கு கொம்பனி சைக்கிள் வேணுமாம் கொம்பனி சைக்கிள்” என்று கூறுவதனூடாக அவர்களுடைய பேச்சு வழக்கினை அறிந்து கொள்ளலாம். ஆர்.எம்.நௌஸாத் சிறந்த முறையில் பேச்சு வழக்கினை கையாண்டுள்ளார் என்று கூறமுடியும்.

‘             காகித உறவுகள்’ என்னும் இன்னொரு வானொலி நாடகத்தினைப் பற்றி நோக்குவோம். இந்நாடகமானது தன்மானத்தை பெரிதாகவும் உயிர் மூச்சாகவும் நினைக்கின்ற குடும்பத் தலைவனைப் பற்றியும் அவனுடைய தன்மானத்தால் மகளுக்கு கேட்கப்பட்டிருந்த திருமணம் தடைப்படுகின்ற துன்பத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

               இவ் வானொலி நாடகத்தில்; றசாக் மாஸ்டரின் குடும்ப அங்கத்தவர்களே கதாபாத்திரங்களாக காணப்படுகின்றனர். றசாக் மாஸ்டர் (குடும்பத் தலைவன்)ää சுகறா(மனைவி)ää றியாஸ்(மகன்)ää பாத்திமா (மகள்ää இவர் திருமணம் கேட்கப்பட்டுள்ள பெண்)ää ஆதிகா (இளைய மகள்)ää அர்சாத் (மாப்பிள்ளை) ஆகியோர் இந் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக காணப்படுகின்றனர்.

                 பாத்திமாவை அர்சாத்துக்கு பெண்ணாக கேட்கப்பட்டிருந்தது. அர்சாத்தின் தந்தையார் திருமணத்திற்கு பின்னர் கேட்டிருந்த சீதனக்காசு இருபத்தைந்தாயிரத்தை திருமணத்திற்கு முன்னரே தரும்படி கேட்டதனால்ää றசாக் மாஸ்டரும் அவருடைய மனைவியும் பணத்தை எவ்வாறு கொடுப்பது என்பதனை நினைத்து திண்டாடினார்.

               இந்த நேரத்தில் சுகறா தனது கணவனான றசாக் மாஸ்டரைää மாப்பிள்ளை வீட்டில் போய் தவணை கேட்டு வரும்படி கூற தன்மானத்தை பெரிதாக நினைத்து றசாக் மாஸ்டர் அதனை மறுக்கின்றார். சிறிது நேரம் கழிந்த பின் சுகறாää தாய்ää தந்தையை மதிக்காமல் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்த தன்னுடைய மகன் அர்சாத்துடைய வீட்டுக்குச் சென்று பணம் கேட்கää பணத்தை தந்தையை வந்து வாங்கும்படி கூறுகிறான்.
அப்போது சுகறா  “என்னடா சொன்னää வெல பேசிறியாடா? வெல நீயும் ஒரு மகனாடா! அவர்ர மதிப்பு உனக்கு தெரியலடாää கோடி பணம் கொட்டிக் குடுத்தாலும் தன்மானத்தை இழக்காத றஸாக் மாஸ்டர பொஞ்சாதிடா நான்”4
என்று கூறிவிட்டு வீட்டிற்கு செல்கிறார். இதனை அறிந்த றசாக் மாஸ்டர் “மக்குää மாடு என்ட தன்மானம் காத்துல பறக்குது”5 என்று மனைவியுடன் கோபப்படுகிறார்.

     மாப்பிள்ளை அர்ஸாத்ää தன்னுடை தந்தையின் சீதனக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திருமணத்தை நடத்துவதற்காகவும் தன்னிடமுள்ள இருபத்தைந்தாயிரம் ரூபாவை றசாக் மாஸ்டரிடம் கொடுத்து தன்னுடைய தந்தையிடம் நீங்கள் கொடுப்பது போல் கொடுக்கவும் என்று கூறää றஸாக் மாஸ்டர் இந்த பணத்தை நான் வாங்கினால் எனது தன்மானத்தை நான் இழந்து விடுவேன் என்று கூறிää அப்பணத்தை வாங்க மறுக்கின்றார். அதனால் மகளுடைய திருமணம் தடைப்பட்டு விடுகின்றது. மகளும் தந்தையின் தன்மானத்தை விற்று தனக்கொரு வாழ்க்கை தேவையில்லை என்று கூறி தனது விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறாள். இதுவே இக்காகித உறவுகள் என்னும் வானொலி நாடகத்தின் கதையாகும்.

            இந் நாடகத்தில் சுகறாää றஸாக் மாஸ்டரின் உரையாடல்களின் மூலமாக அவர்களுடைய பேச்சு வழக்கினை அறியலாம்.

“சுகறா நீ இன்னும் சின்னப்புள்ள மாதிரித்தான் பேசுற. இந்த கல்யாணம் செய்றதுக்குää இந்த மாப்பிள்ளையை எடுக்கிறதுக்கு நாம பட்டபாடு ஒனக்கு தெரியாதா?”

“ஏ மகனா?யாருடைய மகன் ஓ மகனா? மகனாம் பெரிய மகன் பெத்து வளர்த்த நன்றி துளி கூட இல்லாம அவன் விரும்பின ஒருத்தியோட….”
               


நௌஸாத் அவருடைய வானொலி நாடகங்களில் மக்களின் வாழ்வியல் அம்சங்களை பேச்சு வழக்கினூடாக சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். 00




Sunday, June 28, 2015

ஒலிபரப்பப்பட்ட நாடகங்களும் தொழில் நுட்பக் கலைஞர்களும்



ஒலிபரப்பான வானொலி நாடகங்கள் மற்றும்;
தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம்


ஒலிபரப்பான நாடகங்கள்

01 25.05.1988.
நினைப்பது ஒன்று

02 23.06.1988
வாக்கு

03 30.08.1988.
ஒரு கிராமத்தின் கவிதை

(இது 5 வருடங்களில் பதினாறு தடவைகள் மீள் ஒலிபரப்புச்; செய்யப்பட்டது.)

04 ….01.1989.
இங்கும் ஒரு தாஜ்மஹால்

05 13.08.1989.
காகித உறவுகள்.

1998ம் ஆண்டில் பிரான்ஸ் தமிழ்ஒலி நிறுவனம் இலங்கை தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து சில்லைய10ர் செல்வராசன் ஞாபகார்த்தமாக
நடத்திய வானொலி நாடகப்போட்டியில் மூன்றாம் பரிசாக ரூபா. 25000 மற்றும் சான்றிpதழ் பெற்றது

06 08.05.1990.
சீட்டுக்காசு

07 23.08.1990.
துயரங்களும் ஓய்வதில்லை

08 23.10.1990.
களவெட்டி.

1991ல் நிகழ்ந்த கல்முனைத் தமிழ்மொழித்திறன் விழாவில் இந்நாடகத்தைப் பின்னணி ஒலிபரப்பாகக் கொண்டு மேடையேற்றப்பட்டு கல்முனை மஹ்முத்மகளிர் கல்லூரி மாணவிகளால் நடிக்கப்பட்டு முதற்பரிசு பெற்றது.

09 16.02.1993.
உறுதி

10 04.10.1999
ஆரத்திக் கல்யாணம்.

11 ….07.1999.
ஓட்டம்.


தொழில் நுட்பக் கலைஞர்கள்

தயாரிப்பு

அஷ்ரப்கான்.

தொழிநுட்ப உதவிகள்

இந்திரவன்ஸ பெரேரா. கோவிலூர்
செல்வராசன்.- சுனில் வல்பிட்ட-
ரஞ்சன் ருபசிங்’க கே. புpரான்சிஸ். -
இந்திரசேகர- தம்மிகா வர்மரத்ன-
நாமல் ரணசிங்க-

குரல் நடிப்பு


கே.ஏ ஜவாஹர்.-
ஏ.ஆர்.எம். ஜிப்ரி-
ஞெய் ரஹீம் ஷஹீட்.-
அஷ்ரப் சிகாப்தீன்.-
எம்.ஐ. சிகாமுதீன்.-
ஏ.எல். ஜபீர்.-
ஸனூஸ் முகம்மத் பெரோஸ்.-
எச்ஏ.எம்.ஹ_ஸைன். –
நூர்ஜஹான் மர்சுக்.-
புர்கான் பீ இப்திகார்.-
கே.எம். ஏ மொஹிடீன்.-
எம்.எம். ரவ்ப். -
ஷில்மியா ஹாதி-
எம்.எம்.ஏ லத்தீப்.-
எம். அஷ்ரப்கான்.-
ஏ.சி. ஹ_ஸைன் பாறுக்.
ஏஏம். தாஜ்.-
ஏ.எல்.எம். ஷபீக்.-
ஏ.எல். கபீர்.-

0000


25.05.1988. நினைப்பது ஒன்று

தயாரிப்பு
அஷ்ரப்கான்.

தொழிநுட்ப உதவி
ரஞ்சன் ருபசிங்’க

குரல் நடிப்பு
நூர்ஜஹான் மர்சுக்.
ஷில்மியா ஹாதி-
எம். அஷ்ரப்கான்.-
ஏ.சி. ஹ_ஸைன் பாறுக்

.
23.06.1988. வாக்கு

தயாரிப்பு
அஷ்ரப்கான்.

தொழிநுட்ப உதவி
குரல் நடிப்பு
எம். எச். பௌசுல் அமீர்.
ஏ.ஆர்.எம். ஜிப்ரி
ஞெய் ரஹீம் ஷஹீட்.
நூர்ஜஹான் மர்சுக்.
எம்.எம். ரவ்ப்.


30.08.1988. ஒரு கிராமத்தின் கவிதை.

தயாரிப்பு
அஷ்ரப்கான்.

தொழிநுட்ப உதவி
இந்திரசேகர

குரல் நடிப்பு
கே.ஏ ஜவாஹர்.
ஞெய் ரஹீம் ஷஹீட்.
ஸனூஸ் முகம்மத் பெரோஸ்.
ஷில்மியா ஹாதி
ஏ.ஏம். தாஜ்


….01.1989. இங்கும் ஒரு தாஜ்மஹால்.

தயாரிப்பு
அஷ்ரப்கான்.

தொழிநுட்ப உதவி

---------------------------------
குரல் நடிப்பு

விபரங்கள் கிடைக்கவில்லை.


13.08.1989. காகித உறவுகள்.

தயாரிப்பு
அஷ்ரப்கான்.

தொழிநுட்ப உதவி
கோவிலூர் செல்வராசன்.

குரல் நடிப்பு
கே.ஏ ஜவாஹர்.
ஞெய் ரஹீம் ஷஹீட்.
ஸனூஸ் முகம்மத் பெரோஸ்.
எச்.ஏ.எம். ஹ_ஸைன்.
நூர்ஜஹான் மர்சுக்.
புர்கான் பீ இப்திகார்.-


08.05.1990. சீட்டுக்காசு.

தயாரிப்பு
அஷ்ரப்கான்.

தொழிநுட்ப உதவி
தம்மிகா வர்மரத்ன

குரல் நடிப்பு
கே.ஏ ஜவாஹர்.
ஞெய் ரஹீம் ஷஹீட்.
அஷ்ரப் சிகாப்தீன்.
ஷில்மியா ஹாதி



23.08.1990. துயரங்களும் ஓய்வதில்லை.- (நம்பிக்கை)

தயாரிப்பு
அஷ்ரப்கான்.

தொழிநுட்ப உதவி
இந்திரவன்ஸ பெரேரா.

குரல் நடிப்பு
கே.ஏ ஜவாஹர்.
ஞெய் ரஹீம் ஷஹீட்.
எச்ஏ.எம். ஹ_ஸைன்.
ஷில்மியா ஹாதி
எம்.எம்.ஏ லத்தீப்.-


23.10.1990. களவெட்டி.

தயாரிப்பு
அஷ்ரப்கான்.

தொழிநுட்ப உதவி
இந்திரவன்ஸ பெரேரா.

குரல் நடிப்பு
கே.ஏ ஜவாஹர்.
ஞெய் ரஹீம் ஷஹீட்.
கே.எம். ஏ மொஹிடீன்.
எம்.எம். ரவ்ப்.
ஷில்மியா ஹாதி


16.02.1993. உறுதி.

தயாரிப்பு
அஷ்ரப்கான்.

தொழிநுட்ப உதவி
நாமல் ரணசிங்க-

குரல் நடிப்பு
ஞெய் ரஹீம் ஷஹீட்.
ஏ.எல். ஜபீர்
எம்.எம். ரவ்ப்.
ஷில்மியா ஹாதி
ஏ.எல்.எம். ஷபீக்


04.10.1999 ஆரத்திக் கல்யாணம்.

தயாரிப்பு
அஷ்ரப்கான்.

தொழிநுட்ப உதவி
இந்திரவன்ஸ பெரேரா

குரல் நடிப்பு
கே.ஏ ஜவாஹர்.
ஏ.ஆர்.எம். ஜிப்ரி
ஞெய் ரஹீம் ஷஹீட்.
அஷ்ரப் சிகாப்தீன்.
எம்.ஐ. சிகாமுதீன்.
ஏ.எல். ஜபீர்


….07.1999. ஓட்டம்.

தயாரிப்பு
அஷ்ரப்கான்.

தொழிநுட்ப உதவி
கே. புpரான்சிஸ்.

குரல் நடிப்பு
ஞெய் ரஹீம் ஷஹீட்.
எம்.ஐ. சிகாமுதீன்
புர்கான் பீ இப்திகார்
எம்.எம்.ஏ லத்தீப்.
ஏ.சி. ஹ_ஸைன் பாறுக்.