Saturday, July 25, 2015

ஆர்.எம். நௌஸாத்தின் வானொலி நாடகங்கள்- ஆய்வுக் கட்டுரை.. -முகமட் அஸ்மத்.

ஆர்.எம். நௌஸாத்தின் வானொலி நாடகங்கள்-
ஆய்வுக் கட்டுரை..

-முகமட் அஸ்மத்.
(தமிழ் சிறப்பு- தெ .கி.ப.க.)



      நாம் இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போன்றே அன்று வானொலி நாடகங்களும் காணப்பட்டன. இதனைப் பற்றி நௌஸாத்-- “ஆ… அது ஒரு  பொற்காலம்! இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு நேயர்களிடம் இருக்கும் வரவேற்பு அப்போது வானொலி நாடகங்களுக்கு இருந்தன. வானொலி நாடகங்களுக்காக நேயர்கள் காத்துக் கிடந்தனர். வானொலி நாடகங்களின்; குறியீட்டொலி கேட்டே தம் கடிகாரங்களை திருப்பி வைக்கின்ற காலம் அது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நௌஸாத்தின் முதல் வானொலி நாடகம் ‘வாக்கு’ முஸ்லிம் சேவையில் 1985 இல் ஒலிபரப்பானது. தொடர்ந்தும் அவர் 1990 வரை சுமார் 12 வானொலி நாடகங்களை எம்.அஸ்ரப்கான் அவர்களின் நெறியாள்கையில் எழுதியுள்ளார். “இந்நாடகங்களில் ‘ஒரு கிராமத்தின் கவிதை’ எனும் வானொலி நாடகம் சுமார் 25 தடவைகள் ஒலிபரப்பானது.”2என்று நௌஸாத் குறிப்பிட்டுள்ளார்.

               இவர் ஆராத்திக் கல்யாணம்ää காகித உறவுகள்ää களவட்டிää ஒரு கிராமத்தின் கவிதைää நினைப்பது ஒன்றுää ஏற்றம்ää நம்பிக்கை முதலான பெயர்களில் வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். இவருடைய சில வானொலி நாடகங்களைப் பற்றி விரிவாக நோக்குவோம்.

             முதலில் இவருடைய ‘ஆராத்திக் கல்யாணம்’ என்னும்; நாடகத்தினைப் பற்றி நோக்குவோம். இந்நாடகமானது சீதனத்தைப்பற்றியும் அதிகமாக சீதனத்தை கேட்கும் மாப்பிள்ளை வீட்டாரைப்பற்றியும்ää அதனை கொடுக்காமல் திண்டாடும் பெண் வீட்டாரின் நிலைமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

     இவ் வானொலி நாடகத்தில் உதுமான் (பெண்ணின் தந்தை)ää சலுகா (மாப்பிள்ளையின் தாய்)ää பைசானா (மாப்பிள்ளையின் தங்கை)ää முஸ்வா முதலாளி (சலுகாவின் கணவனின் நண்பன்) ஆகிய பாத்திரங்களினூடாக கதை நகர்த்தப்பட்டுள்ளது.

     சுப்பர் புரோக்கர் எதையும் சுப்பர் என்று கூறுவதனாலேயேää அவனை எல்லோரும் இப் பெயர் கொண்டழைத்தனர். இவன் உதுமானின் மகளை சலுகாவின் மகனுக்கு பெண்ணாக கொண்டு வருகிறான். மாப்பிள்ளை வீட்டார் சீதனமாக வீடுää வளவுää நகைää பணம் ஐம்பதாயிரம் என்று கேட்கää தனது வருமானத்தினால் அத் தொகையை கொடுக்க முடியாது என்று பெண்ணின் தந்தை கூற அப்போது முஸ்வா முதலாளி வந்து நாற்பதாயிரமாக்கி நடுநிலையில் நின்று முடிவினை  கூறுகின்றார். மாப்பிள்ளை மோட்டார் வண்டியும வாங்கிக் கேட்க அதனையும் கொடுக்கின்றார்.

                உதுமான் பெண் பார்க்க வந்தவர்களை பலகாரம்ääபழம்ää பிஸ்கட்ää கற்கண்டுää குளிர்பானம்ää இனிப்புää வெற்றிலைää பாக்குää பாய்ää படிக்கம்ää சக்கரைää வெடிக்கட்டு முதலானவற்றைக் கொண்டு சிறப்பாக உபசரிக்கின்றார். மாப்பிள்ளையின் தங்கை பைசானா மருதாணியை பெண்ணுக்கு போட்டு விட்டு ஆராத்தியையும் எடுக்கின்றாள். பின்னர் பகல்வர்த்தி கொழுத்துகின்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

             மாப்பிள்ளை வீட்டார்ää வாங்கிக் கொடுத்த மோட்டார் வண்டி பழையதொன்றும்ää உதுமானின் வீட்டுக்கு பூசப்பட்டுள்ள வர்ணப் பூச்சு பட்டிக் காட்டு நிறம் என்றும்ää குறை கூறியதுமில்லாமல் புதிய மோட்டார் வண்டி வாங்கித்தர வேண்டும்ää இளம் நிறத்தில் வீட்டுக்கு வர்ணம் பூச வேண்டும்ää மாப்பிள்ளையின் தங்கைக்கு தங்க நகைகள் போடவேண்டுமென்று நிபந்தனைகளை விதிக்கää அதனை நிறைவேற்ற முடியாமல் வாக்கு வாதங்களில் திருமணம் தடைப்படுகின்றது.

                      உதுமான் சுப்பர் புரோக்கரைப் பார்த்து “கலியானம் முடியக்கொள என்ட சிறு வால் மட்டும் தான் மிஞ்சும்ää மாப்பிள்ளை என்ன இன்ஜினியரா? ஜிலாக்குத்தரா? கரிக்கட்டி சொத்தைக்கு கொம்பனி சைக்கிள் வேணுமாம் கொம்பனி சைக்கிள்” என்று கூறுவதனூடாக அவர்களுடைய பேச்சு வழக்கினை அறிந்து கொள்ளலாம். ஆர்.எம்.நௌஸாத் சிறந்த முறையில் பேச்சு வழக்கினை கையாண்டுள்ளார் என்று கூறமுடியும்.

‘             காகித உறவுகள்’ என்னும் இன்னொரு வானொலி நாடகத்தினைப் பற்றி நோக்குவோம். இந்நாடகமானது தன்மானத்தை பெரிதாகவும் உயிர் மூச்சாகவும் நினைக்கின்ற குடும்பத் தலைவனைப் பற்றியும் அவனுடைய தன்மானத்தால் மகளுக்கு கேட்கப்பட்டிருந்த திருமணம் தடைப்படுகின்ற துன்பத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

               இவ் வானொலி நாடகத்தில்; றசாக் மாஸ்டரின் குடும்ப அங்கத்தவர்களே கதாபாத்திரங்களாக காணப்படுகின்றனர். றசாக் மாஸ்டர் (குடும்பத் தலைவன்)ää சுகறா(மனைவி)ää றியாஸ்(மகன்)ää பாத்திமா (மகள்ää இவர் திருமணம் கேட்கப்பட்டுள்ள பெண்)ää ஆதிகா (இளைய மகள்)ää அர்சாத் (மாப்பிள்ளை) ஆகியோர் இந் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக காணப்படுகின்றனர்.

                 பாத்திமாவை அர்சாத்துக்கு பெண்ணாக கேட்கப்பட்டிருந்தது. அர்சாத்தின் தந்தையார் திருமணத்திற்கு பின்னர் கேட்டிருந்த சீதனக்காசு இருபத்தைந்தாயிரத்தை திருமணத்திற்கு முன்னரே தரும்படி கேட்டதனால்ää றசாக் மாஸ்டரும் அவருடைய மனைவியும் பணத்தை எவ்வாறு கொடுப்பது என்பதனை நினைத்து திண்டாடினார்.

               இந்த நேரத்தில் சுகறா தனது கணவனான றசாக் மாஸ்டரைää மாப்பிள்ளை வீட்டில் போய் தவணை கேட்டு வரும்படி கூற தன்மானத்தை பெரிதாக நினைத்து றசாக் மாஸ்டர் அதனை மறுக்கின்றார். சிறிது நேரம் கழிந்த பின் சுகறாää தாய்ää தந்தையை மதிக்காமல் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்த தன்னுடைய மகன் அர்சாத்துடைய வீட்டுக்குச் சென்று பணம் கேட்கää பணத்தை தந்தையை வந்து வாங்கும்படி கூறுகிறான்.
அப்போது சுகறா  “என்னடா சொன்னää வெல பேசிறியாடா? வெல நீயும் ஒரு மகனாடா! அவர்ர மதிப்பு உனக்கு தெரியலடாää கோடி பணம் கொட்டிக் குடுத்தாலும் தன்மானத்தை இழக்காத றஸாக் மாஸ்டர பொஞ்சாதிடா நான்”4
என்று கூறிவிட்டு வீட்டிற்கு செல்கிறார். இதனை அறிந்த றசாக் மாஸ்டர் “மக்குää மாடு என்ட தன்மானம் காத்துல பறக்குது”5 என்று மனைவியுடன் கோபப்படுகிறார்.

     மாப்பிள்ளை அர்ஸாத்ää தன்னுடை தந்தையின் சீதனக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திருமணத்தை நடத்துவதற்காகவும் தன்னிடமுள்ள இருபத்தைந்தாயிரம் ரூபாவை றசாக் மாஸ்டரிடம் கொடுத்து தன்னுடைய தந்தையிடம் நீங்கள் கொடுப்பது போல் கொடுக்கவும் என்று கூறää றஸாக் மாஸ்டர் இந்த பணத்தை நான் வாங்கினால் எனது தன்மானத்தை நான் இழந்து விடுவேன் என்று கூறிää அப்பணத்தை வாங்க மறுக்கின்றார். அதனால் மகளுடைய திருமணம் தடைப்பட்டு விடுகின்றது. மகளும் தந்தையின் தன்மானத்தை விற்று தனக்கொரு வாழ்க்கை தேவையில்லை என்று கூறி தனது விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறாள். இதுவே இக்காகித உறவுகள் என்னும் வானொலி நாடகத்தின் கதையாகும்.

            இந் நாடகத்தில் சுகறாää றஸாக் மாஸ்டரின் உரையாடல்களின் மூலமாக அவர்களுடைய பேச்சு வழக்கினை அறியலாம்.

“சுகறா நீ இன்னும் சின்னப்புள்ள மாதிரித்தான் பேசுற. இந்த கல்யாணம் செய்றதுக்குää இந்த மாப்பிள்ளையை எடுக்கிறதுக்கு நாம பட்டபாடு ஒனக்கு தெரியாதா?”

“ஏ மகனா?யாருடைய மகன் ஓ மகனா? மகனாம் பெரிய மகன் பெத்து வளர்த்த நன்றி துளி கூட இல்லாம அவன் விரும்பின ஒருத்தியோட….”
               


நௌஸாத் அவருடைய வானொலி நாடகங்களில் மக்களின் வாழ்வியல் அம்சங்களை பேச்சு வழக்கினூடாக சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். 00




No comments:

Post a Comment